1,571 மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

கோவை மாவட்டத்தில் மின்பாதைகளில் சிறப்பு பராமரிப்பு பணியையொட்டி 1,571 மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
கோவை மாவட்டத்தில் மின்பாதைகளில் சிறப்பு பராமரிப்பு பணியையொட்டி 1,571 மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
1,571 மரக்கிளைகள் வெட்டி அகற்றம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால், கோவை மாவட்டத்தில் மின்தடை மற்றும் மின்விபத்துகளை தடுக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது பருவமழையை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதற்கு தேவையான தளவாட பொருட்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
கோவை மின்பகிர்மான தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட 7 துணை மின் நிலையங்களில் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சிறப்பு மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, பல்வேறு இடங்களில் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் ஒயர்களை உரசியவாறு ஆபத்தான நிலையில் இருந்த 1,571 மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
மேலும் பழுதடைந்த 108 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன. சாய்ந்த நிலையில் நின்ற 6 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டன.
மின்மாற்றிகள் பராமரிப்பு
தாழ்வாக மின் பாதைகளுக்கு இடையே 26 மின் கம்பங்கள் மற்றும் 12 இடங்களில் நில இணைப்புகள் நிறுவப்பட்டன. பழுதடைந்த 24 இழுவை கம்பிகள் சரி செய்யப்பட்டன. 33 இடங்களில் தாழ்வாக சென்ற மின்பாதைகள் உயர்த்தப்பட்டன.
பழுதடைந்த 30 பீங்கான் மாற்றப்பட்டுள்ளன. 73 இடங்களில் கண்டறியப்பட்ட பழுதடைந்த ஜம்பர் ஒயர் மாற்றப்பட்டது.
70 மின் மாற்றிகளில் உள்ள காற்று இடைவெளி திறப்பான் சரி செய்யப்பட்டது. இதுதவிர காடுவெட்டிபாளையம் உள்பட 9 மின் மாற்றிகளில் சிறப்பு பராமரிப்பு மற்றும் எண்ணெய் அளவு சரி பார்க்கப்பட்டன.
40 இடங்களில் மின்மாற்றிகளின் பழுதடைந்த கட்டமைப்புகள் சரி செய்யப்பட்டன. ஒரு புதிய காற்று இடை வெளி திறப்பான் அமைக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு உள்ளது.
இந்த தகவலை கோவை தெற்கு மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.






