பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசிநாள்
பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் நெல்- 2 (சிறப்பு) மற்றும் ரபி 2022-23 பருவத்திற்கு பயிர் காப்பீட்டு செய்ய வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். திருவண்ணமாலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய ஏதுவாக அரசு விடுமுறை நாளான இன்று (சனிக்கிழமை) மற்றம் நாளை (ஞாயிற்றுகிழமை) ஆகிய 2 நாட்களிலும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறாத விவசாயிகளிடம் இருந்து காப்பீடு பிரிமிய தொகை பெற்று பதிவு செய்யப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொண்டு கடைசி நேர இடையூறுகளை தவிர்த்து முன்னதாகவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.