நெகமம் அருகே பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது-ரூ.11½ லட்சம், சொகுசு கார் பறிமுதல்


நெகமம் அருகே  பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது-ரூ.11½ லட்சம், சொகுசு கார் பறிமுதல்
x

நெகமம் அருகே பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.11½ லட்சம், சொகுசு கார் பறிமுதல் ெசய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.11½ லட்சம், சொகுசு கார் பறிமுதல் ெசய்யப்பட்டது.

ரகசிய தகவல்

நெகமம் அருகே மூட்டாம்பாளையத்தில் உள்ள தோட்டத்து சாலையில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக நெகமம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள், சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் 16 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அந்த கும்பல் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றது. எனினும் போலீசார் கும்பலை சுற்றி வளைத்தனர். இதையடுத்து பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

16 பேர் கைது

விசாரணையில், கோவை ரத்தினபுரியை சேர்ந்த சதிஸ்குமார் (வயது48), பேரூரை சேர்ந்த பாலகுமார்(25), காந்தி நகரை சேர்ந்த கார்த்திகுமார்(40), பொள்ளாச்சியை சேர்ந்த ஹக்கிம்(40), விவேகானந்தன்(47), ஜாபரலி(27), உஸ்மன்(37), கார்த்திகேயன்(25), சதீஸ்குமார்(46), வஞ்சிமுத்து(27), நெகமத்தை சேர்ந்த செழியன்(38), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிபுதின்(45), கேரளா நெல்லிமேடு பகுதியை சேர்ந்த மணிராஜ்(46), தொப்பம்பட்டியை சேர்ந்த காளிமுத்து (42), ஆலந்துரை சேர்ந்த விஜயகுமார் (37) ஆகியோர் என்பதும், சூதாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 16 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மேலும், அவர்களிட மிருந்து சூதாடிய பணம் ரூ.11 லட்சத்து 64 ஆயிரம், ஒரு சொகுசு கார், 6 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு தங்க மோதிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய தோட்டத்து உரிமையாளர் கவுசிக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story