சிங்கப்பெருமாள் கோவில் அருகே கோவில் பூட்டை உடைத்து 16 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு


சிங்கப்பெருமாள் கோவில் அருகே கோவில் பூட்டை உடைத்து 16 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு
x

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கோவில் பூட்டை உடைத்து 16 கிலோ ஐம்பொன் சிலை திருடப்பட்டது.

செங்கல்பட்டு

கோவில் பூட்டு உடைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே மகேந்திரா சிட்டி கூட்ரோடு சந்திப்பு ஜி.எஸ்.டி. சாலையில் தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூசாரி நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல அம்மனுக்கு பூஜைகள் செய்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை 5 மணி அளவில் கோவிலை சுத்தம் செய்வதற்காக வந்த ஊழியர் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

ஐம்பொன் சிலை திருட்டு

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்து விசாரித்த போது கோவிலில் இருந்த 16 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சாமி சிலை மற்றும் 11 கிலோ எடை கொண்ட காமாட்சி பித்தளை குத்துவிளக்கு திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து கோவில் நிர்வாகி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் காமாட்சி குத்து விளக்கு திருடிய மர்ம நபர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story