Normal
வாகன சோதனையில் 16 மோட்டார் சைக்கிள்கள்- ஆட்டோ பறிமுதல்
வாகன சோதனையில் 16 மோட்டார் சைக்கிள்கள்- ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி
பொன்மலைப்பட்டி:
திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பகுதியில் நேற்று பொன்மலை உதவி கமிஷனர் காமராஜ் தலைமையில் அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள், நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகளும் கூறினர். இந்த வாகன சோதனையில் 16 மோட்டார் சைக்கிள்களும், ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டு அரியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
Related Tags :
Next Story