விவசாயி வீட்டில் 16 பவுன் நகை திருட்டு


விவசாயி வீட்டில் 16 பவுன் நகை திருட்டு
x

சோளிங்கர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விவசாயி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் விவசாயி. சம்பவத்தன்று இரவு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு நிலத்துக்கு சென்றுள்ளார். பின்னர் காலையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது சீனிவாசன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ திறந்திருந்தது.

16 பவுன் நகை திருட்டு

அதன் அருகில் வைத்திருந்த சாவியை எடுத்து மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 16 பவுன் நகையை திருடிச்செனஅெறது தெரியவந்தது.

இதுகுறித்து கொண்டபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சப்-இ்ன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.


Related Tags :
Next Story