160 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்


160 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
x

பனப்பாக்கத்தில் 160 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்ப்டது. கடை உரிமையாளர் கைதானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக நெமிலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இரு குழுக்களாக பிரிந்து பனப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பனப்பாக்கம் பகுதியில் அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 160 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கடையின் உரிமையாளர் ஆனந்தன் (வயது 45) என்பவரை நெமிலி போலீசார் கைது செய்து குட்கா பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story