இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட 1,680 கிலோ பீடி இலை பறிமுதல்


இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட 1,680 கிலோ பீடி இலை பறிமுதல்
x

மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட 1,680 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட 1,680 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அதிரடி சோதனை

இலங்கை கல்பட்டி கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக மூடைகளில் சில பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அங்கு விரைந்து சென்று கடற்கரை பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூடைகளை பிரித்து சோதனை செய்தனர்.

அப்போது 30-க்கும் மேற்பட்ட மூடைகளில் சுமார் 1,680 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக

இந்த பீடி இலைகள் அனைத்தும் தமிழக பகுதியில் இருந்து குறிப்பாக மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாகவே இலங்கைக்கு கடத்தல் ஏஜெண்டுகள் மூலம் கடத்தி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இது குறித்து இலங்கை கடற்படையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் ராமேசுவரம் மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த உளவு பிரிவு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story