பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 17 தொழிற்சாலைகள் மூடப்பட்டன


பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 17 தொழிற்சாலைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 10 Nov 2022 7:30 PM GMT (Updated: 10 Nov 2022 7:30 PM GMT)

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 17 தொழிற்சாலைகளை அதிகாரிகள் மூடி நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 17 தொழிற்சாலைகளை அதிகாரிகள் மூடி நடவடிக்கை எடுத்தனர்.

பிளாஸ்டிக் பொருட்கள்

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், அதை விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும், அதை உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சேலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர், கைப்பை (கேரி பேக்குகள்) உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்ததாக 17 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

சீல்

மேலும், மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் வேறு எங்கும் செயல்படுகிறதா? என்பது குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இவற்றில் ஏதாவது தொழிற்சாலை செயல்படுவது கண்டறியப்பட்டால் அந்த ஆலைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story