பெரம்பலூரில் புதிதாக 17 பேருக்கு கொரோனா


பெரம்பலூரில் புதிதாக 17 பேருக்கு கொரோனா
x

பெரம்பலூரில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 607 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 261 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்கு 249 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று பெரம்பலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 97 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 82 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 பேர் திருச்சி, பெரம்பலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 174 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story