கொரோனாவுக்கு 17 பேர் பாதிப்பு


கொரோனாவுக்கு 17 பேர் பாதிப்பு
x

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 17 பேர் பாதிக்கப்பட்டனர்.

சேலம்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 20 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6 பேர், வீரபாண்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், பனமரத்துப்பட்டியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சேலத்துக்கு ஈரோட்டில் இருந்து வந்த 3 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 2 பேர், நாமக்கல்லில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story