ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 17 பவுன் நகை திருட்டு
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 17 பவுன் நகை திருடப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மானாமதுரை,
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 17 பவுன் நகை திருடப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை திருட்டு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்ராஜ். இவருடைய மனைவி வினோதினி (வயது 25). சம்பவத்தன்று இவர் மதுரையில் இருந்து பரமக்குடி செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார்.
பரமக்குடி வந்ததும் அவர் கொண்டு வந்த பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது பையில் இருந்த 17 பவுன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவர் தன் அருகே மற்றொரு சந்தேகத்திற்குரிய பெண் ஒருவர் திடீரென திருப்புவனம் பஸ் நிலையத்தில் அவசர, அவசரமாக இறங்கி உள்ளார்.
போலீசில் புகார்
இதையடுத்து அவர் தான் தனது நகையை திருடி சென்றிருக்க வேண்டும் என கருதிய வினோதினி பின்னர் திருப்புவனத்திற்கு வந்து திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் அந்த சந்தேகத்திற்குரிய பெண் குறித்து புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சந்தேகத்திற்குரிய பெண்ணை தேடி வருகின்றனர். திருடு போன 17 பவுன் நகையில் 13 பவுன் நெக்லஸ் மற்றும் 2 பவுன் கைச்செயின் ஒன்றும், 2 பவுன் கம்மல் ஆகியவையாகும். இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.