கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 17 பவுன் நகை திருட்டு


கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 17 பவுன் நகை திருட்டு
x

பாப்பாக்குடியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருநெல்வேலி

முக்கூடல்:

பாப்பாக்குடியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவில் கும்பாபிஷேகம்

பாப்பாக்குடி திருகடிக்கை மூன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கீழப்பாவூர் வாணியர் மேட்டு தெரு வடக்கு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மனைவி செண்டு என்பவரிடம் 65 கிராம் நகை, அம்பாசமுத்திரம் திலகர்புரம் தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி முத்துலட்சுமியிடம் 40 கிராம் நகை, பாப்பாக்குடி மேலத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சந்தான லட்சுமியிடம் 32 கிராம் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். மொத்தம் 3 பெண்களிடம் இருந்து 17 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பாப்பாக்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story