தமிழகத்தில் இன்று 1,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழகத்தில் இன்று 1,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 28 July 2022 8:52 PM IST (Updated: 28 July 2022 8:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 1,712 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று மொத்தம் 36 ஆயிரத்து 028 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டது. இதில் 1,712 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனாவால் இன்று எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 38,032 ஆக உள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 368 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.செங்கல்பட்டு -177 , கோவை -166, பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story