அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.17,500 அபராதம


அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.17,500 அபராதம
x

தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.17,500 அபராதம்

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் நேற்று காலையில் தக்கலை பழைய பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக கேரளாவுக்கு மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டார். இதில் அளவுக்கு அதிகமாக பாரத்தில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து ரூ.17,500 அபராதம் விதித்தார். பின்னர் அபராத தொகையை லாரி டிரைவர் கட்டிய பிறகு லாரியை போலீசார் விடுவித்தனர்.


Next Story