1,780 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்


1,780 இடங்களில் இன்று   கொரோனா தடுப்பூசி முகாம்
x

குமரி மாவட்டத்தில் 1,780 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 445 குழுக்கள் 1780-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளனர். இந்த மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 82 சதவீதம் பேரும், இரண்டாவது தவணை 71 சதவீதம் பேரும், மூன்றாவது தவணை 11 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டனர். அரசால் மூன்றாவது டோஸ் தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி முதல் 75 நாட்கள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் ஆன அனைவரும் " இலவசமாக மூன்றாவது தவணை தடுப்பூசி " செலுத்த இந்த அரிய வாய்ப்பை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிநாடு செல்ல விரும்புவோர் இரண்டாவது தவணை செலுத்தி 3 மாதங்கள் ஆகியிருந்தால் கூட மூன்றாவது தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்திக் கொள்ள முடியும்.

எனவே அனைவரும் மூன்றாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு நாடும், வீடும் நலமுடன் வாழவும் வளமுடன் வளரவும் வழிவகைசெய்ய முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story