மண்டபம் கடலில் வீசிய 18 கிலோ கடத்தல் தங்கம் மீட்பு: மேலும் 3 பேர் அதிரடி கைது
மண்டபம் கடலில் வீசிய 18 கிலோ கடத்தல் தங்கம் மீட்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மண்டபம் கடலில் வீசிய 18 கிலோ கடத்தல் தங்கம் மீட்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
18 கிலோ தங்கம் மீட்பு
இலங்கையில் இருந்து கடந்த 7-ந் தேதி அன்று இரவு 3 பேர் தங்கக்கட்டிகளை கடத்திக்கொண்டு. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை நோக்கி படகில் வந்தனர். அந்த படகை ரோந்து கப்பலில் சென்ற மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரும், இந்திய கடலோர காவல் படையினரும் மடக்கினர்.
அப்போது படகில் இருந்த 3 பேர் கடலில் வீசிய 18 கிலோ தங்கக்கட்டிகள் கொண்ட பார்சலை, நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு கடலோர காவல் படையினர் மீட்டனர்.. இந்த சம்பவத்தில் படகில் வந்த 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
மேலும் 3 பேர் கைது
இந்த நிலையில், மண்டபம் மற்றும் வேதாளை பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேரை மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்களுக்கு இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் கடத்தி வந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து 18 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட 6 பேரும் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.