வக்கீல் வீட்டில் 18 பவுன் நகை, வெளிநாட்டு பணம் திருட்டு


வக்கீல் வீட்டில் 18 பவுன் நகை, வெளிநாட்டு பணம் திருட்டு
x
தினத்தந்தி 2 July 2023 12:45 AM IST (Updated: 2 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

வக்கீல் வீட்டில் 18 பவுன் நகை, வெளிநாட்டு பணம் திருட்டு

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, வெளிநாட்டு பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வக்கீல்

கோவை சுங்கம் பைபாஸ் ரோடு சிவராம் நகரை சேர்ந்தவர் சண்முகம். வக்கீல். இவரது மனைவி சாந்தி சண்முகம் (வயது 58). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது மகனை பார்க்க சென்றார்.

பின்னர் அங்கிருந்து இரவு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

நகை, பணம் திருட்டு

பின்னர் அவர் பீரோவை பார்த்தார். பீரோவில் வைத்து இருந்த 18 பவுன் தங்க நகை, 200 யூரோ டாலர், 500 அமெரிக்க டாலர், வெள்ளி கம்மல் மற்றும் ரூ.40 ஆயிரத்தை காணவில்லை. சாந்தி சண்முகம் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சாந்தி சண்முகம் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். தொடர்ந்து போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story