ஈரோடு மாநகரில் ஒரே நாளில் பிடிபட்ட 18 பாம்புகள்


ஈரோடு மாநகரில் ஒரே நாளில் பிடிபட்ட 18 பாம்புகள்
x

ஈரோடு மாநகரில் ஒரே நாளில் பிடிபட்ட 18 பாம்புகள்

ஈரோடு

ஆயுதபூஜையையொட்டி பொதுமக்கள் வீடுகள், வணிக நிறுவனங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு குமலன்குட்டை, செல்வம் நகர், மாணிக்கம்பாளையம், சக்தி நகர், கருங்கல்பாளையம், சோலார், சூளை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் பதுங்கி இருந்த 3 அடி நீளம் முதல் 10 அடி நீளம் வரை உள்ள கோதுமை நாகம், சாரை பாம்பு, கண்ணாடி விரியன், கொம்பேரி மூக்கன் உள்ளிட்ட 4 வகையான 18 பாம்புகள் ஒரேநாளில் பிடிபட்டுள்ளன.

வீடுகளில் சமையல் அறை, மோட்டார் அறை, ஏ.சி., கட்டுமான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்ட இடம், மெத்தை படிக்கட்டுகள் அடியில், கார் சக்கரம், குடிநீர் குழாய் உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருந்த பாம்புகளை, பாம்புபிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். கடந்த 14 ஆண்டுகளில் 34 ஆயிரத்து 800 பாம்புகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து இருப்பதாக பாம்பு பிடி வீரர் யுவராஜ் தெரிவித்தார்.


Next Story