3 வீடுகளில் 18 பவுன் நகைகள்-பணம் திருட்டு


3 வீடுகளில் 18 பவுன் நகைகள்-பணம் திருட்டு
x

3 வீடுகளில் 18 பவுன் நகைகள்-பணம் திருட்டு

திருச்சி

சமயபுரம்:

நகை-பணம் திருட்டு

சிறுகனூர் அருகே உள்ள எதுமலை செட்டியார் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 52). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு முசிறி அருகே உள்ள திருத்தலையூருக்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 1 பவுன் மூக்குத்தி, 1 பவுன் எடையுள்ள 2 சங்கிலி உள்ளிட்ட 3 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதேபோல் சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் கவுண்டர் தெருவை சேர்ந்த துரைசாமி என்பவர் மகன் செந்தில்வேலன் (வயது 30) என்பவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். அவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் சங்கிலி, 6 பவுன் ஆரம், 2 பவுன் சங்கிலி, 1 பவுன் தோடு செட் உள்ளிட்ட 12 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இதேபோல், சிறுகனூர் அருகே உள்ள வாழையூர் கோனார் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வீட்டில் 3 பவுன் சங்கிலி மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து மூன்று பேரும் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story