180 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


180 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Aug 2023 7:45 PM GMT (Updated: 1 Aug 2023 7:45 PM GMT)

பொள்ளாச்சி நகரில் 180 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகரில் 180 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

கடைகளில் ஆய்வு

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து ஆணையாளர் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் முருகானந்தம் மேற்பார்வையில் சுகாாதார ஆய்வாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்களை கொண்ட குழுவினர் பஸ் நிலையம், வெங்கடேசா காலனி, கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.

180 கிலோ பறிமுதல்

இதையடுத்து 32 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 180 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி நகரில் உள்ள கடைகளில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடைக்காரர்களுக்கு மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலே அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.


Next Story