புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 1,814 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்


புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 1,814 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்
x

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 1,814 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர் என கலெக்டர் தகவல் கூறினார்.

கரூர்

கரூரில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின் கீழ் உயர்க்கல்வி உறுதி திட்டம் மூலம் உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000-க்கான வரவேற்பு பெட்டகப்பையை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:- 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி பயிலுவதற்கு மாதம் ரூ.1,000 அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் உயர்கல்வி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கு உருவாக்கப்பட்டு வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம் ஆகியவை வழங்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் 1,814 மாணவிகள் பெண்கல்வி இணையதளத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்து பயனடைந்துள்ளனர். இன்று (நேற்று) முதல்-அமைச்சரின் புதுமைப்பெண் திட்ட அறிமுக விழாவில் 10 கல்லூரிகளில் 667 மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.மீதம் உள்ள மாணவிகளுக்கு ஊக்கத்தொகையானது அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ள மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும், என்றார்.


Next Story