183 சிலைகள் வைத்து பூஜை செய்ய ஏற்பாடு


183 சிலைகள் வைத்து பூஜை செய்ய ஏற்பாடு
x

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 183 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 183 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்து அமைப்புகள் சார்பில், பொது இடங்களில் சிலைகள் வைத்து பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கூடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 6 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் 8 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சக்தி விநாயகர் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து இரவு 8 மணி வரை விசேஷ பூஜைகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

183 சிலைகள்

இதேபோல் கோவில் வளாகத்திலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில், கூடலூர் தாலுகா முழுவதும் 96 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

பந்தலூர் தாலுகாவில் 87 இடங்களில் சிலைகள் வைப்பதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 183 விநாயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அடுத்த மாதம் 4-ந் தேதி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story