1,859 ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மேம்படுத்தப்படும்: கலெக்டர் தகவல்


1,859 ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மேம்படுத்தப்படும்: கலெக்டர் தகவல்
x

1,859 ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மேம்படுத்தப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர்

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் 2021-22-ம் ஆண்டுக்கான 46 ஊராட்சிகளும், நடப்பாண்டு தேர்வு செய்யப்பட்ட 29 ஊராட்சிகளும் என மொத்தம் 75 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் ரூ.227 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு இத்திட்டத்தில் ரூ.7.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நிலப்பகுதியில் மண் ஆய்வு, நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும். நீர்வளம் ஆதாரம் இருப்பின் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்சார வசதி அல்லது சூரியசக்தி பம்பு செட் மூலம் நீர் வசதி செய்து நீர் பங்கீடு முறைப்படி உகந்த பயிர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் 1,859 ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட வேளாண்மைதுறைக்கு ரூ.27.2 லட்சமும், தோட்டக்கலைத்துறைக்கு ரூ.17.5 லட்சமும், வேளாண்மை பொறியியல் துறைக்கு ரூ.743.4 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.


Next Story