உண்டியல்கள் மூலம் ரூ.19 லட்சத்து 62 ஆயிரம் வருமானம்


உண்டியல்கள் மூலம் ரூ.19 லட்சத்து 62 ஆயிரம் வருமானம்
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உண்டியல்கள் மூலம் ரூ.19 லட்சத்து 62 ஆயிரம் வருமானம்

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருகின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் பக்தர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அதில் காணிக்கையாக ரூ.19 லட்சத்து 62 ஆயிரத்து 972 கிடைத்தது. அப்போது மாசாணியம்மன் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளா தேவி, தங்கமணி, மருதமுத்து, உதவி ஆணையர் விஜயலட்சுமி, தேக்கம்பட்டி உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, ஆய்வர் சித்ரா, பாதுகாப்பு அதிகாரி முத்துராமன் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story