அரசு விரைவு பஸ் கவிழ்ந்து 19 பயணிகள் படுகாயம்
நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 19 பயணிகள் படு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 19 பயணிகள் படு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
விரைவு பஸ் கவிழ்ந்து விபத்து
திருப்பதியிலிருந்து சேலத்திற்கு அரசு விரைவு பஸ் ஒன்று சென்றது. சேலம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 41) பஸ்சை ஓட்டிச்சென்றார். அதேப் பகுதியை சேர்ந்த கணேசன் கண்டக்டராக இருந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது மதியம் 2 மணியளவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
19 பயணிகள் காயம்
இந்த விபத்தில் நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவ சவுமியா (18), பாரதி (25), சந்துரு (21), சிக்தா (2) மற்றும் டிரைவர் சக்திவேல், கண்டக்டர் கணேசன் உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.