தனியார் நிறுவன மேலாளரின் வீட்டில் 19 பவுன் கொள்ளை
புதுச்சத்திரம் அருகே தனியார் நிறுவன மேலாளரின் வீட்டில் 19 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நாமக்கல்
புதுச்சத்திரம் அருகே வசித்து வருபவர் பிரகாஷ் (வயது 38). தனியார் நிறுவன மேலாளராக உள்ளார். இவரது மனைவி சத்யா (36) நாமக்கல் கோர்ட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே நேற்று பிரகாஷ் அவரது மனைவியை கோர்ட்டில் பணிக்கு விட அழைத்துச் சென்று உள்ளார். அதை அறிந்த மர்மநபர்கள் பிரகாஷ் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 ஆயிரத்தை கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் வீடு திரும்பிய பிரகாஷ் பூட்டு உடைக்கப்பட்டு, நகை மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story