ஆதரவின்றி சுற்றித்திரிந்த 19 பேர் காப்பகங்களில் ஒப்படைப்பு


ஆதரவின்றி சுற்றித்திரிந்த 19 பேர் காப்பகங்களில் ஒப்படைப்பு
x

ஆதரவின்றி சுற்றித்திரிந்த 19 பேர் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுப்படி கரூர் மாவட்டம் முழுவதும் ஆதரவின்றி சுற்றித்திரியும் வயது முதிர்ந்தோர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் பஸ் நிலையம், கடைவீதிகள், போக்குவரத்து சிக்னல், கோவில்கள் போன்ற இடங்களில் உணவு தேவைக்காக பிச்சை எடுத்து இருப்பிடம் இன்றி சுற்றித்திரியும் நபர்களை கண்டறிந்து அவர்களின் புது வாழ்விற்காக காப்பகங்களுக்கு அழைத்து சென்று ஆதரவளித்து பாதுகாக்க வேண்டி துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கடந்த 3, 4-ந்தேதிகளில் 19 நபர்களை கண்டறிந்து அவர்களின் புது வாழ்விற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டனர். மேற்படி சுற்றித்திரியும் நபர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்குடன் பொய்யான தகவல்களை பரப்பிவரும் நபர்கள் மற்றும் பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் நபர்கள் பற்றிய தகவல் தெரியவந்தால் சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்போன் எண்ணிற்கு (94981 88488) தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.


Next Story