அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.94 கோடி உண்டியல் காணிக்கை


அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.94 கோடி உண்டியல் காணிக்கை
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.94 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி காலையில் தொடங்கி 31-ந் தேதி காலையில் நிறைவடைந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி இன்று கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

இதில் உண்டியல் காணிக்கையாக 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளி, ரூ.1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 இருந்தது.

1 More update

Related Tags :
Next Story