புதிதாக 196 மாணவர்கள் சேர்ந்தனர்
புதிதாக 196 மாணவர்கள் சேர்ந்தனர்
கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதையொட்டி மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. அதன்படி கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர ஏராளமான மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடந்தது. பின்னர் பாடபுத்தகங்களும், பைகளும் வழங்கப்பட்டன. அங்கு ஒரே நாளில் 196 மாணவ-மாணவிகள் புதிதாக சேர்ந்தனர். இதேபோன்று கோவில்பாளையம் காளியண்ணன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் 50 மாணவ-மாணவிகள் புதிதாக சேர்ந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story