1,965 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
வேலூர் மாவட்டத்தில் 1,965 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.
வேலூர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், உழவர்சந்தைகள், பஜார், ஆட்டோ நிறுத்தம், பள்ளிகள் என்று 1,965 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பூசி போடும் பணியில் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story