ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை


ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை
x

ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை

திருப்பூர்

வீ.மேட்டுப்பாளையம்

வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள் வாங்கி செல்வார்கள். அதன்படி சந்தையில் நேற்று தக்காளி ஒரு கிலோ ரூ. 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும், கேரட் ரூ.70-க்கும், பீட்ரூட் ரூ.60-க்கும், வெண்டைக்காய் ரூ.50-க்கும் விற்பனையானது.

உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், பீன்ஸ் ரூ.80-க்கும், இஞ்சி ரூ.250-க்கும், மூட்டைக்கோஸ் ரூ.30-க்கும், பாகற்காய் ரூ50-க்கும், அவரைக்காய் ரூ.50-க்கும், சுரைக்காய் ரூ.15-க்கும், கத்திரிக்காய் ரூ.40-க்கும், பீர்க்கங்காய் ரூ.50-க்கும், மல்லிதழை கட்டு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை சந்தை வியாபாரி சிவா தெரிவித்தார்

-------------


Next Story