மின்கம்பி அறுந்து விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்புகள் எரிந்து நாசம்


மின்கம்பி அறுந்து விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்புகள் எரிந்து நாசம்
x

பள்ளிப்பட்டு அருகே கரும்புத் தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட கரும்புகள் எரிந்து நாசமானது.

திருவள்ளூர்

கரும்பு தோட்டம்

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் அத்திமாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் நாயுடு (வயது 60). இவரது தம்பி தேவநாயுடு (55). இவர்கள் இருவருக்கும் சொந்தமான கரும்புத்தோட்டம் அத்திமாஞ்சேரி கிராமத்தில் உள்ளது. இவர்களது கரும்புத் தோட்டம் வழியாக மின்கம்பிகள் செல்கிறது. இந்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. தாழ்வாக செல்லும் மின்கம்பிளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

2 ஏக்கர் கரும்புகள் நாசம்

இந்த நிலையில் நேற்று இவர்களது கரும்புத் தோட்டத்தின் வழியாக சென்ற மின் கம்பி அறுந்து கரும்பு தோட்டத்தில் விழுந்தது. உடனே கரும்புத் தோட்டத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் நாயுடு, தேவநாயுடு உடனே இதுகுறித்து பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கரும்புத்தோட்டத்தில் பிடித்த தீயை போராடி அணைத்தனர். அதற்குள் இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் எரிந்து நாசமானது.

எனவே கரும்புத் தோட்டங்கள் வழியாக செல்லும் மின் கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் முறையாக பாராமரித்து மீண்டும் விபத்து ஏற்படாமல் பாதுகாக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story