பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது


பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது
x

பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே உள்ள பெரம்பூர் கட்டையடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது38). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கும்பகோணத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்சில் பணியில் இருந்தார். அந்த பஸ் நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. சீத்தாராமபையன்சாவடி சுடுகாடு அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது பிரேத ஊர்வலம் வந்ததால் பஸ் ஓரமாக நிறுத்திவைத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஊர்வலத்தில் வந்தவர்கள் பஸ்சில் ஏறி கண்டக்டர் ராஜாராமனை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக ராஜாராமன் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நீடாமங்கலம் போலீசார் காளாஞ்சிமேடு ரொக்க குத்தகையை சேர்ந்த விக்னேஷ் (32), அர்ச்சுனன் (19), பிரசாந்த் (19) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் விக்னேஷ், அர்ச்சுனன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் ேதடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story