சாராயம் விற்ற 2 பெண்கள் கைது
சாராயம் விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்- இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது திருத்துறைப்பூண்டி கொக்கலாடி பகுதியில் சாராயம் விற்ற பிரேமா (வயது58), மீனாட்சி வாய்க்கால் பகுதியில் சாராயம் விற்ற காந்திமதி (62) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 215 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்தனர்.
Related Tags :
Next Story