காரில் போலி 'நம்பர் பிளேட்'


காரில் போலி நம்பர் பிளேட்
x

காரில் போலி நம்பர் பிளேட் பயன்படுத்திய கேரளாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

காரில் போலி நம்பர் பிளேட் பயன்படுத்திய கேரளாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்களை சுற்றிப்பார்க்க...

கேரள மாநிலம் ஆலப்புழா அளவத்தூரை சேர்ந்தவர் சாபி (வயது52). இவர் ரப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் தனுக்கு சொந்தமான காரில் டிரைவர் அதே ஊரைச் சேர்ந்த சிபி (35) என்பவருடன் கோவில்களை சுற்றி பார்ப்பதற்காகவும், ரப்பர் கம்பெனிக்கு ஆர்டர் எடுப்பதற்காகவும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

இவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இவர்கள் வந்த காரில் முன்புறம் கேரள பதிவு எண்ணும், பின் பகுதியில் தமிழ்நாடு பதிவு எண் என ஒன்றுக்கு ஒன்றுக்கு முரணாக இருந்தது.

போலி நம்பர் பிளேட்

இதனை கண்ட சிலர் சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று காரை கைப்பற்றி 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவர்கள் காரில் போலி நம்பர் பிளேட் பொருத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story