வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
ஆடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
வழிப்பறி
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார். அதன்படி திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகபர்சித்திக் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் ஏட்டு கவியரசன், காவலர்கள் ரமணி, விக்னேஷ், தினேஷ் ஆகியோரை கொண்ட போலீசார் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
நகைகள்- மோட்டார் சைக்கிள் பறிமுதல்
இந்த கும்பலைச் சேர்ந்த திருவாடுதுறையை சேர்ந்த குமார், தஞ்சை மானோஜிபட்டியை சேர்ந்த மாதவன் ஆகிய 2 பேரையும் ஆடுதுறை பஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் இவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.