மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மொளசி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்
மோட்டார் சைக்கிள் திருட்டு
மொளசி அருகே ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேலு (வயது 35). விவசாயி. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ராஜவேலு ராக்கியா வலசு பகுதி வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி உள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் ராஜவேலுவை சரமாரியாக தாக்கிவிட்டு ேமாட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.
இதுகுறித்து ராஜவேலு மொளசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்போில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் ராஜவேலுவின் மோட்டார் சைக்கிளை திருடிய அந்த மர்மநபர்கள் 2 பேர் ராக்கியா வலசு பகுதியில் மறைந்து இருப்பதாக மொளசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ராக்கியா வலசு பகுதியை சேர்ந்த மயில்சாமி (32) என்பதும், மற்றொருவர் வக்கீல் தோட்டம் பகுதியை சேர்ந்த மற்றொரு மயில்சாமி (26) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.