மதுவிற்ற 2 பேர் கைது


மதுவிற்ற 2 பேர் கைது
x

பள்ளிபாளையத்தில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்ட விேராதமாக மது விற்பனை நடப்பதாக திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் உத்தரவின் பேரில் பள்ளிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், பிரபாகரன், ஏட்டுகள் ரஞ்சித்குமார், சதீஷ்குமார் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது காவிரி கரையோரம் அரசு அனுமதி இன்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த பவித்ரன் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 348 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் செங்குட்டைபாளையம் விவசாய காட்டில் மறைத்து வைத்து மதுவிற்ற அருள்மொழி தேவன் (35) என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 More update

Next Story