மதுவிற்ற 2 பேர் கைது; 233 மதுபாட்டில்கள் பறிமுதல்
பரமத்தியில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்ததுடன் 233 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பரமத்திவேலூர்
ரகசிய தகவல்
பரமத்தி அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து பரமத்தி பழைய கோர்ட்டு வீதி பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (வயது 50) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து 205 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
இதேபோல் கீழ் சாத்தம்பூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மதுபாட்டில்களை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்த வள்ளியப்பம்பட்டி, அருந்ததியர் தெருவை சேர்ந்த பழனி (55) என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து 28 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.