ரூ.1½ லட்சம் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது


ரூ.1½ லட்சம் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
x

ஓசூரில் கடையில் பதுக்கி வைத்திருத்த ரூ.1½ லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்ப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ரகசிய தகவல்

ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று மாலை அங்கு திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது கடையில் 213 கிலோ குட்கா பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கடையில் இருந்த மேராராம் (வயது28), ஜெய்சாராம் (25) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஓசூரில் கடை வாடகைக்கு எடுத்து குட்காவை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஓசூர் பகுதியில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர்.


Next Story