வெண்ணந்தூர் அருகே கோழிகள் திருடிய 2 பேர் கைது


வெண்ணந்தூர் அருகே   கோழிகள் திருடிய 2 பேர் கைது
x

வெண்ணந்தூர் அருகே கோழிகள் திருடிய 2 பேர் கைது

நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே சப்பையாபுரம் குடியிருப்பு பகுதியில் கோழிகள் அடிக்கடி திருட்டு போவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வந்ததது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீடுகளில் கோழிகள் திருடிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் சண்முகம் (வயது 25), அத்தினவேல் மகன் மூர்த்தி (28) என்பது தெரியவந்தது. நண்பர்களான 2 பேரும் செலவுக்காக அப்பகுதியில் உள்ள வீடுகளில் கோழிகளை திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.


Next Story