வக்கீல் அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் 2 பேர் கைது


வக்கீல் அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
x

நெல்லையில் வக்கீல் அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

திருநெல்வேலி

பாளையங்கோட்டை:

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ஜெனி (வயது 44). வக்கீல். இவர் அ.தி.மு.க. பாளையங்கோட்டை வடக்கு பகுதி செயலாளராக இருந்து வருகிறார். இவரின் அலுவலகம் சமாதானபுரம் மிலிட்டரி லைனில் உள்ளது. இந்த அலுவலகத்தை சிலர் சூறையாடியதாக ஜெனி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தச்சநல்லூரை சேர்ந்த ராமசந்திரன் மகன் குருநாதன் (28), பூலுடையார்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் கொம்பையா (30) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் வக்கீல் அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று நெல்லையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story