புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
x

வெப்படையில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்த வெப்படையில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்போில் வெப்படை சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் ஏட்டுகள் சரவணன், கார்த்தி ஆகியோர் வெப்படை பஸ் நிறுத்தும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் இரண்டு மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி வந்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா என 70 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்து இருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணையில் திருச்செங்கோட்டை சேர்ந்த கிம்லத்க்கான் (வயது 28) மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி (29) என்பதும் தெரிவயவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு கைது செய்தனர்.


Next Story