விவசாயியின் மர்ம உறுப்பை அறுத்த 2 பேர் கைது


விவசாயியின் மர்ம உறுப்பை அறுத்த 2 பேர் கைது
x

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட விவசாயியின் மர்ம உறுப்பை அறுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

மொரப்பூர்

கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டியை சேர்ந்த வடிவேல் (வயது 55). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது தோட்டத்தில் விவசாய வேலைகளை முடித்து கொண்டு, டிராக்டரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கேத்துரெட்டிபட்டி மயானம் அருகே, அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (58), செல்வம் (51) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். இதனை வடிவேல் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும், வடிவேலை டிராக்டரில் இருந்து கீழே தள்ளினர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வடிவேலின் மர்ம உறுப்பை அறுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவராஜ், செல்வம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story