வீடு புகுந்து 13 பவுன் நகைகள் திருடிய 2 பேர் கைது


வீடு புகுந்து 13 பவுன் நகைகள் திருடிய 2 பேர் கைது
x

வெண்ணந்தூரில் வீடு புகுந்து 13 பவுன் நகைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

வெண்ணந்தூர்

13 பவுன் நகைகள்

வெண்ணந்தூர், ஹரி நகரில் உள்ள அங்காளம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). இவர் கடந்த 30.4.2022 அன்று தனது மனைவியுடன் வெளியூர் சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் செருக்கலை பகுதியைச் சேர்ந்த அப்புசாமி மகன் பாலமுருகன் என்பவரை போலீசார் வாகன சோதனையின்போது பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் வெண்ணந்தூரில் 13 பவுன் நகைகள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை போலீசார் தேடிவந்தனர்.

2 பேர் கைது

இந்தநிலையில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம், சி.தண்டேஷ்வரநல்லூர், கொய்யாபிள்ளை சாவடி பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் பிரபு (24), நாமக்கல் மாவட்டம் பரமத்தி, புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மணி என்கிற கோவில் மணி (35) ஆகிய 2 பேர் கந்தசாமி வீட்டில் புகுந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் பிரபு, கோவில் மணி ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.


Next Story