2 பேர் கைது


2 பேர் கைது
x

2 பேர் கைது

தஞ்சாவூர்

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மோசடி

திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. 9 பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, தஞ்சை உள்பட 10 இடங்களில் செயல்பட்டது. அதிக வட்டி தருவதாக இந்த நிறுவனத்தினர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி, நூற்றுக்கணக்கானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.

இந்த நிலையில், பணத்தை திரும்ப கேட்ட வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 50-க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

2 பேர் கைது

இந்த புகார்கள் எல்லாம் தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து இந்த நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகளான ராமநாதன் (வயது55), ராஜேஷ் (43) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் மதுரை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story