தேன்கனிக்கோட்டையில்வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது


தேன்கனிக்கோட்டையில்வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெத்தல்லி கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 29). இவருக்கும், கர்நாடக மாநிலம் ஆனேக்கல் உஸ்கூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா (24), கோவிந்த் (32) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்ரு முன்தினம் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கோபியின் தம்பி மாதேஷ் (24) அதனை தட்டி கேட்டுள்ளார். அப்போது அவரை கிருஷ்ணா, கோவிந்த் கத்தியால் குத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணா, கோவிந்தை கைது செய்தனர்.


Next Story