பீகார் மாநில வாலிபரை தாக்கிய 2 பேர் கைது


பீகார் மாநில வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே பீகார் மாநில வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் நசீர்கான் (வயது35). கட்டிட என்ஜினீயர். இவர் ராமநாதபுரம் பாப்பாகுடி விலக்கு அருகில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி எடுத்து மேற்கொண்டு வருகிறார். இந்த கட்டிட பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் அருகில் நாய்கள் விடாமல் குரைத்துள்ளது. இதனை பீகார் மாநிலத்தை சேர்ந்த முகம்மது அலி (26) என்பவர் சென்று பார்த்து அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருந்தவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நாய் அப்படித்தான் குரைக்கும். நீ யார் கேட்க என்று கேட்டு அவதூறாக பேசியதோடு கட்டையால் தாக்கி உள்ளனர். மேலும்.

இந்த தாக்குதலை விலக்க வந்த மற்றவர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். முகம்மது அலி படுகாயமடைந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் நசீர்கானிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து பாப்பாகுடி முனியாண்டி மகன் பிரசன்னா (22), கவரங்குளம் சுப்பிரமணி மகன் சரத்குமார் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பாக பாப்பாகுடி முனியாண்டி மகன் பிரதீப் (20), தங்கப்பன் மகன் அருண்குமார் (21), வசந்தநகர் கிருஷ்ணமூர்த்தி மகன் மணிபாரதி (23) ஆகிய 3 பேரையும் தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story