டீக்கடை ஊழியரை தாக்கிய 2 பேர் கைது


டீக்கடை ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
x

டீக்கடை ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் உழவர் சந்தை அருகே உள்ள ஈ.வி.ஆர். சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் காசாளராக வேலை பார்த்து வருபவர் அஜித் (வயது 28). இவர் சம்பவத்தன்று கடையில் பணிபுரிந்துக்கொண்டு இருந்தார். அப்போது கடைக்கு வந்த திருமூலரைச் சேர்ந்த இபினேஷ் ராஜ் (21), தினேஷ் பாலு (24) ஆகியோர் அஜித்தை தகாதவார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அஜித் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story